இந்த ஒப்பந்தம் ஆங்கிலத்தில் (யூஎஸ்) எழுதப்பட்டது. ஆங்கிலப் பதிப்பிற்கும் மொழிபெயர்ப்புக்கும் இடையே முரண்பாடுகள் எழும்போது, ஆங்கிலப் பதிப்பே இறுதியானதாகும்.  அமெரிக்காவிற்கு வெளியில் உள்ள பயனர்களுக்காக, 16 ஆம் பிரிவில் உள்ள பொதுவான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதைக் குறித்துக்கொள்ளவும்.
கடைசியாகத் திருத்திய தேதி: ஜனவரி 30, 2015
முத்திரை


www.facebook.com இன் கீழ் உள்ள இணையதளங்கள் மற்றும் இந்தப் பக்கங்களின் சேவைகளை வழங்குபவர்:

Facebook Ireland Limited, 4 Grand Canal Square, Dublin 2, Ireland

இயக்குநர் குழுமம்: Gareth Lambe, Shane Crehan
அயர்லாந்தில் பதிவுசெய்யப்பட்டது (நிறுவனப் பதிவு அலுவலகம்)
நிறுவனத்தின் எண் 462932

உதவி மற்றும் புகாரளிப்பதைப் பற்றிய தகவல்களுக்கு: எங்களை மின்னஞ்சலில் தொடர்புகொள்ள:


உரிமைகள் மற்றும் பொறுப்புகளின் அறிக்கை
இந்த உரிமைகள் மற்றும் பொறுப்புகளின் அறிக்கை ("அறிக்கை", "விதிமுறைகள்" அல்லது "SRR") ஆனது Facebook கொள்கைகள் மற்றும் அது Facebook மற்றும் Facebook பிராண்டுகள், “Facebook சேவைகள்” அல்லது “சேவைகள்” என்று அழைக்கப்படும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் பிறருடன் எங்களுக்கு உள்ள தொடர்பை நிர்வகிக்கும் எங்கள் சேவை விதிமுறைகளிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். Facebook சேவைகளைப் பயன்படுத்துவதன் அல்லது அணுகுவதன் மூலம், இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள், மேலும் இது கீழேயுள்ள 13 வது பிரிவிற்கு இணங்க அவ்வப்போது புதுப்பிக்கப்படும். கூடுதலாக, Facebook எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ள உதவும் வளங்களை இந்த ஆவணத்தின் இறுதியில் காணலாம்.
பலதரப்பட்ட சேவைகளை Facebook வழங்குவதன் காரணமாக, நீங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட பயன்பாடு, தயாரிப்பு அல்லது சேவைக்குப் பொருந்தும் துணை அறிக்கை விதிமுறைகளைப் பார்த்து ஏற்றுக்கொள்ளுமாறு உங்களைக் கேட்கலாம். இந்த SRR உடன் அந்த துணை அறிக்கை விதிமுறைகள் முரண்படும் போது, பயன்பாடு, தயாரிப்பு அல்லது சேவையை நிர்வகிக்கும் துணை அறிக்கை விதிமுறைகள் ஆனது, நீங்கள் பயன்படுத்தும் பயன்பாடு, தயாரிப்பு அல்லது சேவையுடன் பொருந்தும் முரண்பாட்டைத் தவிர மற்றவற்றிற்கு அந்த துணை அறிக்கையின் விதிமுறைகள் பொருந்தும்.
  1. தனியுரிமை

    உங்கள் தனியுரிமை எங்களுக்கு மிக முக்கியம். Facebook ஐப் பயன்படுத்தி நீங்கள் எப்படி மற்றவர்களுடன் பகிரலாம் மற்றும் உங்கள் உள்ளடக்கத்தையும் தகவல்களையும் நாங்கள் எவ்வாறு சேகரித்து, எப்படிப் பயன்படுத்துவோம் என்பதை வெளிப்படையாகக் விவரிக்கும் வகையில் எங்கள் தரவுக் கொள்கையை வடிவமைத்துள்ளோம். தரவுக் கொள்கையைப் படிக்கும்படியும், அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் சரியான முடிவுகளை எடுக்கும்படியும் பரிந்துரைக்கிறோம்.
     
  2. உங்கள் உள்ளடக்கம் மற்றும் தகவல்களைப் பகிர்தல்

    Facebook இல் நீங்கள் இடுகையிடும் உள்ளடக்கம் மற்றும் தகவல்கள் அனைத்தும் உங்களுக்குச் சொந்தமானதாகும், மேலும் உங்கள் தனியுரிமை மற்றும் பயன்பாட்டு அமைப்புகளின் மூலம் அவை பகிரப்படும் விதத்தையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம். கூடுதலாக:
    1. படங்கள் மற்றும் வீடியோக்கள் (IP உள்ளடக்கம்) போன்ற அறிவுசார் சொத்துரிமையால் நிர்வகிக்கப்படும் உள்ளடக்கத்திற்கு, உங்கள் தனியுரிமை மற்றும் பயன்பாட்டு அமைப்புகளின்படி, குறிப்பாக பின்வரும் அனுமதியை எங்களுக்கு அளிக்கிறீர்கள், : Facebook (IP உரிமம்) இல் இடுகையிடும் அல்லது அதனுடன் தொடர்புடைய IP உள்ளடக்கத்தைப் பயன்படுத்த பிரத்யேகமற்ற, பரிமாற்றக்கூடிய, துணை உரிமம் அளிக்கக்கூடிய, இலவசமான, உலகளாவிய உரிமத்தை அளிக்கிறீர்கள். இந்த IP உரிமமானது உங்கள் IP உள்ளடக்கம் அல்லது உங்கள் கணக்கை நீக்கும்போது, உள்ளடக்கம் வேறு யாருடனும் பகிரப்பட்டிருக்கவில்லை எனில் முடிவுக்கு வரும்.
    2. நீங்கள் IP உள்ளடக்கத்தை நீக்கும் போது, அது கணினியின் குப்பைத் தொட்டியைக் காலியாக்குவதைப் போலவே நீக்கப்படும். இருப்பினும், குறிப்பிட்ட காலத்திற்கு காப்புப்பிரதி நகல்களாக, அகற்றப்பட்ட உள்ளடக்கம் இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் (எனினும் மற்றவர்களால் அதனைக் காண முடியாது).
    3. நீங்கள் ஒரு பயன்பாட்டைப் பயன்படுத்தும் போது, உங்கள் உள்ளடக்கம் மற்றும் தகவல்களுடன், மற்றவர்கள் உங்களுடன் பகிர்ந்து கொண்ட உள்ளடக்கம் மற்றும் தகவல்களை அணுகுவதற்கு, அந்தப் பயன்பாடு உங்கள் அனுமதியைக் கேட்கலாம்.  உங்கள் தனியுரிமைக்கு மற்ற பயன்பாடுகளும் மதிப்பளிக்க வேண்டும் என விரும்புகிறோம், அத்துடன் அந்தப் பயன்பாட்டுடன் நீங்கள் செய்துகொண்ட ஒப்பந்தமானது, நீங்கள் பயன்பாட்டை எவ்வாறு கட்டுப்படுத்தலாம், உள்ளடக்கம் மற்றும் தகவல்களை எவ்வாறு பயன்படுத்தலாம், சேமிக்கலாம், பரிமாற்றலாம் என்பதைக் கட்டுப்படுத்துகிறது.  (பயன்பாடுகளில் மற்றவர்கள் என்ன வகையான தகவல்களைப் பகிரலாம் என்பதை நீங்கள் கட்டுப்படுத்துதல் உட்பட, பிளாட்பார்ம் பற்றி மேலும் அறிய, எங்கள் தரவுக் கொள்கை மற்றும் பிளாட்பார்ம் பக்கத்தைப் பார்க்கவும்.)
    4. பொது அமைப்பைப் பயன்படுத்தி உள்ளடக்கம் அல்லது தகவல்களை நீங்கள் வெளியிட்டால், Facebook இல் இல்லாதவர்கள் உட்பட அனைவரையும் அந்தத் தகவல்களையும், உங்களுடன் தொடர்புடைய மற்ற விவரங்களையும் (அதாவது, உங்கள் பெயர் மற்றும் சுயவிவிவரப் படம்) அணுக அனுமதிக்கிறீர்கள்.
    5. Facebook ஐப் பற்றி நீங்கள் வழங்கும் பின்னூட்டம் அல்லது பிற கருத்துகளுக்கு எப்போதும் மதிப்பளிக்கின்றோம், எனினும் உங்கள் பின்னூட்டம் அல்லது பரிந்துரைகளுக்கு ஈடுசெய்யும் வகையில் பணம் அல்லது பிறவற்றை அளிக்கும் எவ்விதப் பொறுப்பும் இல்லாமல் அவற்றை நாங்கள் பயன்படுத்தக்கூடும் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள் (அவற்றை வழங்க வேண்டும் என்ற கடமையும் உங்களுக்கு இல்லை).
       
  3. பாதுகாப்பு

    Facebook ஐப் பாதுகாப்பாக வைப்பதற்குத் தேவையான அனைத்தையும் செய்கின்றோம், எனினும் அதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. Facebook ஐப் பாதுகாப்பாக வைப்பதற்கு உங்கள் உதவி எங்களுக்குத் தேவை, அதில் உங்களுக்கான பின்வரும் கடமைகளும் அடங்கும்:
    1. நீங்கள் Facebook இல் அங்கீகாரமற்ற வணிகச் செய்திகளை (ஸ்பேம் போன்றவை) இடுகையிடக்கூடாது.
    2. எங்கள் முன் அனுமதி இல்லாமல் நீங்கள் தானியங்கு முறைகளைப் (ஹார்வேஸ்ட் போட்கள், ரோபோக்கள், ஸ்பைடர்கள் அல்லது ஸ்கிராப்பர்கள் போன்றவை) பயன்படுத்தி மற்ற பயனர்களின் உள்ளடக்கம் அல்லது தகவல்களைச் சேகரிக்கக்கூடாது, அல்லது Facebook ஐ அணுகக்கூடாது.
    3. Facebook இல் பிரமீடு திட்டம் போன்ற சட்ட விரோதமான மல்டி லெவல் மார்கெட்டிங்கில் ஈடுபடக்கூடாது.
    4. நீங்கள் வைரஸ்கள் அல்லது பிற தீங்கிழைக்கும் குறியீடுகளைப் பதிவேற்றக்கூடாது.
    5. வேறொருவருக்குச் சொந்தமான உள்நுழைவுத் தகவல்கள் அல்லது அணுகலை பொதுவில் பகிரக்கூடாது.
    6. நீங்கள் எந்தப் பயனரையும் அச்சுறுத்தவோ, மிரட்டவோ அல்லது தொல்லைதரவோ கூடாது.
    7. வெறுக்கத்தக்க பேச்சு, அச்சுறுத்தல் அல்லது ஆபாசம்; வன்முறையைத் தூண்டுதல்; நிர்வாணம் அல்லது கிராஃபிக் அல்லது அவசியமற்ற வன்முறை போன்றவற்றைக் கொண்டிருக்கும் உள்ளடக்கத்தை நீங்கள் இடுகையிடக்கூடாது.
    8. ஆல்கஹால் தொடர்புடைய, டேட்டிங் அல்லது பிற வயதுவந்தோர் உள்ளடக்கம் (விளம்பரங்கள் உட்பட) ஆகியவற்றைக் கொண்ட பயன்பாட்டை பொருத்தமான வயதுக் கட்டுபாடுகள் இல்லாமல் உருவாக்கவோ அல்லது மூன்றாம் தரப்பினரின் பயன்பாட்டைப் பயன்படுத்தவோ கூடாது.
    9. சட்டவிரோதமான, தவறாக வழிநடத்தும், தீங்கிழைக்கும் அல்லது பாரபட்சமான விஷயங்களுக்கு நீங்கள் Facebook ஐப் பயன்படுத்தக்கூடாது.
    10. சேவையை மறுத்தல் அல்லது பக்க ரெண்டரிங் அல்லது பிற Facebook செயல்பாட்டில் குறுக்கிடுதல் போன்ற Facebook ஐ முடக்கும், அதிக பணிச் சுமை அளிக்கும் அல்லது சரியான செயல்படுதல் அல்லது தோற்றத்தை முடக்கும் காரியத்தை நீங்கள் செய்யக்கூடாது.
    11. இந்த அறிக்கை அல்லது எங்கள் கொள்கைகளை மீறுவதற்கு உதவக்கூடாது அல்லது ஊக்குவிக்கக்கூடாது.
       
  4. பதிவு மற்றும் கணக்குப் பாதுகாப்பு

    Facebook பயனர்கள் தங்கள் அசல் பெயர்களையும் தகவல்களையும் தருகின்றனர், நீங்களும் அவ்வாறே செய்ய வேண்டும் என விரும்புகிறோம். உங்கள் கணக்கைப் பதிவு செய்தல் மற்றும் அதன் பாதுகாப்பைப் பராமரிப்பது தொடர்பாக உங்களுக்கு உள்ள சில கடமைகள்:
    1. Facebook இல் நீங்கள் எந்தத் தவறான தகவல்களையும் தரக்கூடாது அல்லது ஒருவரின் அனுமதியில்லாமல் அவருக்கு கணக்கை உருவாக்கி தரக்கூடாது
    2. நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தனிப்பட்ட கணக்கை உருவாக்கக்கூடாது.
    3. நாங்கள் உங்கள் கணக்கை முடக்கினால், எங்கள் அனுமதி இல்லாமல் வேறு ஒரு கணக்கை நீங்கள் உருவாக்கக்கூடாது.
    4. நீங்கள் உங்கள் சொந்த வணிக இலாபத்திற்காக முதன்மையாக உங்கள் தனிப்பட்ட காலக்கோட்டைப் பயன்படுத்தக்கூடாது மேலும் இது போன்ற காரணங்களுக்காக ஒரு Facebook பக்கத்தைப் பயன்படுத்த வேண்டும்.
    5. உங்கள் வயது 13 க்குக் கீழ் என்றால் நீங்கள் Facebook ஐப் பயன்படுத்தக்கூடாது.
    6. நீங்கள் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியாக இருந்தால், நீங்கள் Facebook ஐப் பயன்படுத்தக்கூடாது.
    7. நீங்கள் உங்கள் தொடர்புத் தகவல்களைத் துல்லியமாகவும், புதுப்பிப்புடனும் வைக்க வேண்டும்.
    8. உங்கள் கடவுச்சொல்லைப் பகிரக்கூடாது (அல்லது டெவலப்பர்களாக இருந்தால் உங்கள் ரகசியக் குறியீட்டை), உங்கள் கணக்கை மற்றவர்கள் அணுக அனுமதிக்கக்கூடாது அல்லது உங்கள் கணக்கின் பாதுகாப்பைச் சீர்குலைக்கும் வேறு எதையும் செய்யக்கூடாது.
    9. எங்கள் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெறாமல் உங்கள் கணக்கை (நீங்கள் நிர்வகிக்கும் பக்கம் அல்லது பயன்பாடு உட்பட) வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாது.
    10. உங்கள் கணக்கு அல்லது பக்கத்திற்கான பயனர்பெயர் அல்லது அதேபோன்ற அடையாளங்காட்டியை நீங்கள் தேர்ந்தெடுத்தால், பொருத்தமான சூழ்நிலைகளில் (டிரேடுமார்க் உரிமையாளர், ஒரு பயனரின் உண்மையான பெயருடன் நெருக்கமாக தொடர்பு இல்லாத ஒரு பயனர்பெயரைப் பற்றி புகாரளிக்கும் போது) அவற்றை அகற்றி, திரும்பப் பெறும் உரிமையை நாங்கள் கொண்டுள்ளோம்.
       
  5. மற்றவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்

    மற்றவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கின்றோம், நீங்களும் அவ்வாறே செய்ய வேண்டும் என விரும்புகிறோம்.
    1. Facebook இல் நீங்கள் பிறரின் உரிமைகளை மீறும் அல்லது சட்டத்தை மீறும் உள்ளடக்கத்தை இடுகையிடவோ அல்லது வேறு செயல்களைச் செய்யவோ கூடாது.
    2. இந்த அறிக்கை அல்லது எங்கள் கொள்கைகளை மீறுவதாக நாங்கள் நினைக்கும் Facebook இல் உங்கள் இடுகையில் உள்ள உள்ளடக்கம் அல்லது தகவல்களை நாங்கள் அகற்றலாம்.
    3. உங்கள் அறிவுசார் சொத்து உரிமைகளைப் பாதுகாக்க உதவும் கருவிகளையும் உங்களுக்கு வழங்குகின்றோம். மேலும் அறிய, எங்கள் அறிவுசார் சொத்துமீறலைப் புகாரளித்து உரிமைகோருவது எப்படி என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
    4. வேறொருவரின் பதிப்புரிமையை மீறியதன் காரணமாக உங்கள் உள்ளடக்கத்தை நாங்கள் அகற்றியிருந்து, ஆனால் அது தவறுதலாக அகற்றப்பட்டிருப்பதாக நீங்கள் நம்பினால், மேல் முறையீடு செய்யும் வாய்ப்பை உங்களுக்கு வழங்குவோம்.
    5. நீங்கள் மற்றவர்களின் அறிவுசார் சொத்து உரிமைகளைத் தொடர்ந்து மீறினால், உங்கள் கணக்கை முடக்குவோம்.
    6. வெளிப்படையாக எங்கள் பிராண்ட் பயன்பாட்டு வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டிருந்தால் அல்லது எங்களிடம் எழுத்துப்பூர்வ முன் அனுமதி பெற்றிருந்தால் தவிர, எங்கள் பதிப்புரிமைகள் அல்லது டிரேடுமார்க்குகள் அல்லது குழப்பம் விளைவிக்கும் ஒரேபோன்ற அடையாளங்களை நீங்கள் பயன்படுத்தக்கூடாது.
    7. பயனர்களிடமிருந்து தகவல்களைச் சேகரித்தால், நீங்கள்: அவர்களின் ஒப்புதலைப் பெறுவதுடன், அவர்களின் தகவல்களை நீங்கள்தான் (Facebook அல்ல) சேகரிக்கிறீர்கள் என்பதைத் தெளிவாகக் கூறிவிட வேண்டும், மேலும் நீங்கள் எந்த வகையான தகவல்களைச் சேகரிக்கிறீர்கள் என்பதையும், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவீர்கள் என்பதையும் விவரிக்கும் தனியுரிமைக் கொள்கையை இடுகையிட வேண்டும்.
    8. நீங்கள் Facebook இல் யாருடைய அடையாள ஆவணங்களையும் முக்கிய நிதித் தகவல்களையும் இடுகையிடக்கூடாது.
    9. மற்றவர்களின் அனுமதியில்லாமல் நீங்கள் அவர்களைக் குறியிடவோ அவர்களுக்கு மின்னஞ்சல் அழைப்பிதழ்களை அனுப்பவோ கூடாது. பயனர்கள் குறியிடுதலைப் பற்றிய பின்னூட்டத்தை வழங்குவதற்கு சமூகப் புகாரளிப்புக் கருவிகளை Facebook வழங்குகிறது.
       
  6. மொபைல் மற்றும் இதர சாதனங்கள்

    1. தற்போது நாங்கள் எங்கள் மொபைல் சேவைகளை இலவசமாக வழங்குகின்றோம் ஆனால் உங்கள் கேரியர் உரைச் செய்தி மற்றும் டேட்டா போன்றவற்றுக்கு வழக்கமான கட்டணங்களை விதிக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
    2. உங்கள் மொபைல் எண்ணை மாற்றும் அல்லது முடக்கும் போது, உங்கள் செய்திகள் உங்கள் பழைய எண்ணை வாங்கிய நபருக்குச் செல்லாமல் தவிர்க்க, Facebook இல் 48 மணிநேரத்திற்குள் உங்கள் கணக்குத் தகவல்களைப் புதுப்பிக்கவும்.
    3. Facebook இல் பிறருக்குத் தெரியும் அனைத்தையும் மற்ற பயனர்களின் சாதனங்களில் ஒத்திசைக்கும் அனுமதியை (பயன்பாடுகளைப் பயன்படுத்துதல் உட்பட) நீங்கள் வழங்குகிறீர்கள்.
       
  7. கட்டணங்கள்

    Facebook இல் நீங்கள் கட்டணம் செலுத்தும் போது, வேறு விதிமுறைகள் கூறப்படும் வரை எங்கள் கட்டண விதிமுறைகளை ஏற்கிறீர்கள்.
     
  8. பயன்பாடுகள் மற்றும் இணையதளங்களின் டெவலப்பர்கள்/ஆபரேட்டர்களுக்கு சிறப்பு விதிமுறைகள் பொருந்தும்

    நீங்கள் பிளாட்பார்ம் பயன்பாது அல்லது இணையதளத்தைப் பயன்படுத்தும் டெவலப்பர்கள் அல்லது ஆபரேட்டராக இருந்தால் அல்லது நீங்கள் சோஷியல் பிளக்இன்களைப் பயன்படுத்தினால், Facebook பிளாட்பார்ம் கொள்கைக்கு நீங்கள் இணங்க வேண்டும்.
  9. Facebook மூலம் வழங்கப்படும் அல்லது மேம்படுத்தப்படும் விளம்பரங்கள் மற்றும் பிற வணிக ரீதியிலான உள்ளடக்கம்

    எங்கள் பயனர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு மதிப்புமிக்க விளம்பரம் மற்றும் பிற வர்த்தக அல்லது ஸ்பான்சர் உள்ளடக்கத்தை வழங்குவதே எங்கள் இலக்கு ஆகும். நாங்கள் அவ்வாறு செய்வதற்கு உதவுவதற்காக, நீங்கள் பின்வருவதை ஏற்றுக்கொள்கிறீர்கள்:
    1. உங்கள் பயனர் பெயர், சுயவிவரப்படம், உள்ளடக்கம் மற்றும் நாங்கள் வழங்கிய அல்லது மேம்படுத்திய வர்த்தக, ஸ்பான்சர் அல்லது தொடர்புடைய உள்ளடக்கத்துடன் தொடர்புடைய தகவல்களை நாங்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கிறீர்கள். அதாவது, உங்கள் உள்ளடக்கம் அல்லது தகவல்களுடன் உங்கள் பெயர் மற்றும்/அல்லது சுயவிவரப் படத்தை, உங்களுக்கு எவ்விதக் கட்டணமும் வழங்காமல், நாங்கள் வேறொரு வணிகம் அல்லது நிறுவனத்திற்குப் பணத்தைப் பெற்றுக்கொண்டு காட்ட அனுமதிக்கிறீர்கள். நீங்கள் உங்கள் உள்ளடக்கம் அல்லது தகவல்களை ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கு மட்டுமானது என்று தேர்வுசெய்தால், நாங்கள் அதைப் பயன்படுத்தும் போது உங்கள் விருப்பத்திற்கும் மதிப்பளிப்போம்.
    2. உங்கள் ஒப்புதல் இல்லாமல் விளம்பரதாரர்களுக்கு உங்கள் உள்ளடக்கம் அல்லது தகவல்களைக் கொடுக்கமாட்டோம்.
    3. நாங்கள் எப்போதும் கட்டணச் சேவைகள் மற்றும் செய்திகளாக அடையாளப்படுத்துவதை வழங்குவதில்லை என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள்.
       
  10. விளம்பரதாரர்களுக்குப் பொருந்தும் சிறப்பு விதிகள்

    நீங்கள் விளம்பரங்கள் அல்லது பிற வர்த்தகச் செய்திகள் அல்லது ஸ்பான்சர் செயல்பாடு அல்லது உள்ளடக்கம் (ஒட்டுமொத்தமாக, “சுய சேவை விளம்பர இடைமுகங்கள்”) ஆகியவற்றை உருவாக்க, சமர்ப்பிக்க மற்றும்/அல்லது டெலிவர் செய்ய எங்கள் சுய சேவை விளம்பர இடைமுகங்களைப் பயன்படுத்தினால், எங்கள் சுய சேவை விளம்பர விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள். கூடுதலாக, Facebook அல்லது எங்கள் வெளியிட்டாளர் நெட்வொர்க்கில் உங்கள் விளம்பரங்கள் அல்லது பிற வர்த்தகச் செய்திகள் அல்லது ஸ்பான்சர் செயல்பாடு அல்லது உள்ளடக்கத்தை இடுகையிட்டால், நீங்கள் எங்கள் விளம்பரப்படுத்தல் கொள்கைகளுக்கு இணங்க வேண்டும்.
  11. பக்கங்களுக்குப் பொருந்தும் சிறப்பு விதிகள்

    Facebook இல் நீங்கள் ஒரு பக்கத்தை உருவாக்கும் போது அல்லது நிர்வகிக்கும் போது அல்லது உங்கள் பக்கத்தில் இருந்து விளம்பரத்தை இயக்கும் போது அல்லது ஆஃபரை வழங்கும் போது, எங்கள் பக்கங்கள் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்.
     
  12. மென்பொருளுக்குப் பொருந்தும் சிறப்பு விதிகள்

    1. தனித்த மென்பொருள் தயாரிப்பு, பயன்பாடு அல்லது உலாவி பிளக் இன் போன்ற எங்கள் மென்பொருளைப் பதிவிறக்கும் அல்லது பயன்படுத்தும் போது, மென்பொருளை மேம்படுத்தவும் இன்னும் சிறப்பானதாக்கவும் அவ்வபோது அந்த மென்பொருள் மேம்பாடுகள், புதுப்பிப்புகள் மற்றும் கூடுதல் அம்சங்களை எங்களிடமிருந்து பதிவிறக்கி நிறுவலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள்.
    2. வெளிப்படையாக ஒப்பன் சோர்ஸ் உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தால் அல்லது எழுத்துப்பூர்வ அனுமதி உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்தால் தவிர, எங்கள் மூலக் குறியீட்டைத் திருத்தவோ, அதிலிருந்து பிற படைப்புகளை உருவாக்கவோ, மீள் தொகுப்பு செய்யவோ அல்லது பிரிக்கவோ கூடாது.

  13. திருத்தங்கள்

    1. இந்த விதிமுறைகளில் மாற்றங்களைச் செய்யும் முன் உங்களுக்குத் தெரிவிப்பதுடன், எங்கள் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் முன் விதிகளின் மாற்றங்களைப் படித்து கருத்துகளைத் தெரிவிக்கும்படி உங்களுக்குத் தெரிவிப்போம்.
    2. இந்த அறிக்கையில் கூறப்பட்ட அல்லது தொடர்புடைய கொள்கைகள், வழிகாட்டல்கள் அல்லது மற்ற விதிமுறைகளில் மாற்றங்களைச் செய்தால், நாங்கள் தள நிர்வாகப் பக்கத்தில் அறிவிப்பை வழங்கலாம்.
    3. தொடர்ந்து நீங்கள் Facebook ஐப் பயன்படுத்துவது, எங்கள் விதிமுறைகள், கொள்கைகள் அல்லது வழிகாட்டல்கள், நாங்கள் மேற்கொண்ட திருத்தங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டதாகக் கவனத்தில் கொள்ளப்படும்.
       
  14. சேவை நிறுத்தம்

    இந்த அறிக்கையின் உள்ளடக்கம் அல்லது சாராம்சத்தை நீங்கள் மீறினால் அல்லது எங்களுக்கு எதிராக அபாயத்தை உருவாக்கினால் அல்லது சாத்தியமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தால், உங்களுக்கு வழங்கும் Facebook சேவையை முழுமையாகவோ பகுதியாகவோ நிறுத்துவோம். உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அல்லது அடுத்த முறை நீங்கள் உங்கள் கணக்கை அணுக முயற்சிக்கும் போது தெரிவிக்கப்படும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் கணக்கை நீக்கலாம் அல்லது பயன்பாட்டை முடக்கிக் கொள்ளலாம். இத்தகைய நேரங்களில், இந்த அறிக்கை நிறுத்தப்படும், ஆனால் பின்வரும் விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும்: 2.2, 2.4, 3-5, 9.3 மற்றும் 14-18.
     
  15. முறையிடல்கள்

    1. இந்த அறிக்கை அல்லது Facebook இலிருந்து அல்லது அதற்குத் தொடர்புடையதாக எழக்கூடிய கிளைம், பிரச்சனையின் காரணம் அல்லது முறையிடல் (கிளைம்) போன்றவற்றை நீங்கள் அமெரிக்காவில் மட்டுமே தீர்க்கவேண்டும். கலிபோர்னியா வடக்கு மாவட்டத்திற்கான மாவட்ட நீதிமன்றம் அல்லது சான் மேடியோ ஒன்றியத்தில் அமைந்துள்ள மாநில நீதிமன்றத்தில், அத்தகைய கிளைம்களை எதிர்கொள்ளும் நோக்கத்திற்காக உங்கள் தனிப்பட்ட உரிமைகளை அந்த நீதிமன்றங்களுக்கு வழங்குவதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள். கலிபோர்னிய மாநிலச் சட்டங்கள் சட்ட விதிகளின் முரண்பாடுகளைக் கவனத்தில் கொள்ளாமல், இந்த அறிக்கை மற்றும் அதே போல் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் எழும் முரண்களை நிர்வகிக்கும்.
    2. Facebook இல் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள், உள்ளடக்கம் அல்லது தகவல்கள் தொடர்பாக யாராவது எங்களுக்கு எதிராக முறையிட்டால், அத்தகைய முறையீட்டால் எங்களுக்கு மற்றும் எங்களுக்கு எதிராக ஏற்படும் சேதங்கள், இழப்புகள் மற்றும் எல்லா வகையான (நியாயமான சட்டக் கட்டணங்கள் மற்றும் செலவுகள் உட்பட) செலவுகள் என அனைத்திலிருந்தும் எங்களைப் பாதுகாக்கவும், இழப்பீடு வழங்கவும் ஒப்புக்கொள்கிறீர்கள். பயனர் நடைமுறைகளை நாங்கள் வழங்கினாலும், Facebook இல் பயனர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது வழிநடத்தவோ செய்வதில்லை, மேலும் Facebook இல் பயனர்கள் பரிமாறும் அல்லது பகிரும் உள்ளடக்கம் அல்லது தகவல்களுக்கு நாங்கள் பொறுப்பேற்பதில்லை. நீங்கள் Facebook இல் எதிர்கொள்ளக்கூடிய தாக்குதல், பொருத்தமற்ற, ஆபாசமான, சட்டவிரோத அல்லது மறுக்கக்கூடிய உள்ளடக்கம் அல்லது தகவல்களுக்கு நாங்கள் பொறுப்பு அல்ல. Facebook இல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பயனரின் நடத்தைக்கு நாங்கள் பொறுப்பு அல்ல.
    3. FACEBOOK ஐச் சிறப்பாகவும், பிழையின்றியும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க முயற்சிக்கின்றோம், எனினும் நீங்கள் உங்கள் சொந்த இடரிலேயே அதனைப் பயன்படுத்த வேண்டும். விற்பனைத்தன்மை, குறிப்பிட்ட நோக்கதிற்குப் பயன்படுத்துதல் மற்றும் உரிமைகளை மீறவில்லை ஆகியவை உட்பட ஆனால் வரம்பின்றி எந்த வெளிப்படையான உத்திரவாதங்களும் இல்லாமல், FACEBOOK உள்ளது உள்ளபடியே, எவ்விதமான மறைமுக அல்லது வெளிப்படையான உத்திரவாதங்கள் இல்லாமல் வழங்குகின்றோம். FACEBOOK எப்போதும் பாதுகாப்பாகவும், பிழைகள் இன்றியும் இருக்கும் என்றும் அல்லது FACEBOOK குறுக்கீடுகள், தாமதங்கள் அல்லது குறைபாடுகள் இல்லாமல் எப்போதும் இயங்கும் என்றும் எந்தவொரு உத்திரவாதமும் அளிக்கவில்லை. மூன்றாம் தரப்பினர் வழங்கும் செயல்பாடுகள், உள்ளடக்கம், தகவல்கள் அல்லது தரவிற்கு FACEBOOK எந்தப் பொறுப்பும் ஏற்பதில்லை, மேலும் நீங்கள் அத்தகைய மூன்றாம் தரப்பினரின் கிளைம் அல்லது அதிலிருந்து வரும் எந்தவொரு கிளைம்கள் மற்றும் சேதங்கள், அறிந்த மற்றும் அறியாத அனைத்திலிருந்தும் எங்களையும், எங்கள் இயக்குனர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் ஏஜென்ட்களையும் விடுவிக்கிறீர்கள். கலிபோர்னியாவில் வசிப்பவராக இருந்தால், §1542 குடியுரிமை நடத்தைக்கு உட்படுவீர்கள், அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு பொதுவான வெளியீட்டில் ஒருவர் அறியாமல் அல்லது இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒன்றில் கிரேடிட்டரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட டெபிட்டருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பொது வெளியீடு பொருந்தாது. சேதங்கள் ஏற்படலாம் என்று நாங்கள் கூறியிருந்தாலும் கூட, இந்த அறிக்கை அல்லது FACEBOOK ஆல் ஏற்படும் அல்லது அதிலிருந்து வரும் இலாப இழப்புகள் அல்லது பிற தொடர், சிறப்பு, மறைமுக அல்லது விபத்து சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பு அல்ல. இந்த அறிக்கை அல்லது FACEBOOK காரணமான எங்கள் மொத்தப் பொறுப்பும் நூறு டாலர்கள் ($100) அல்லது கடந்த பன்னிரண்டு மாதங்களில் நீங்கள் எங்களுக்குச் செலுத்திய தொகையை மீறக்கூடாது. பொருந்தும் சட்டங்கள் பொறுப்பு அல்லது விபத்து அல்லது தொடர் சேதங்களில் இருந்து உங்களுக்குக் கட்டுப்பாடோ அல்லது விலக்கோ அளிக்கவில்லை எனில், மேலே குறிப்பிட்டுள்ள வரம்பு அல்லது விலக்கு உங்களுக்குப் பொருந்தாது. அத்தகைய நிகழ்வுகளில், FACEBOOK இன் பொறுப்புகள் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட முழு வரம்புக்குட்பட்டதாகும்.
       
  16. அமெரிக்காவிற்கு வெளியே உள்ள பயனர்களுக்குப் பொருந்தும் சிறப்பு விதிகள்

    அனைவருக்கும் ஏற்றார்போல் சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க சமூகத்தை உருவாக்குவதையே விரும்புகின்றோம், எனினும் உள்ளூர் சட்டங்களுக்கும் மதிப்பளிக்கின்றோம். அமெரிக்காவுக்கு வெளியில் Facebook உடன் ஊடாடும் பயனர்கள் மற்றும் பயனர் அல்லாதவர்களுக்கு பின்வரும் விதிகள் பொருந்தும்:
    1. நீங்கள் உங்கள் தனிப்பட்ட தரவை அமெரிக்காவிற்கு இடமாற்றவும், அங்கு செயலாக்கவும் ஒப்புதல் அளிக்கிறீர்கள்.
    2. அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட பகுதி அல்லது அமெரிக்கா தடைசெய்துள்ள பகுதியில் நீங்கள் வசித்தால் அமெரிக்க கருவூலத் துறையால் தடைவிதிக்கப்பட்ட நாடுகளில் வசித்தால், நீங்கள் Facebook இல் எந்தவித வர்த்தக நடவடிக்கைகளிலும் (விளம்பரப்படுத்துதல் அல்லது கட்டணங்கள் போன்றவை) ஈடுபடக்கூடாது அல்லது பிளாட்பார்ம் பயன்பாடு அல்லது இணையதளத்தை இயக்கக்கூடாது. அமெரிக்காவில் இருந்துவரும் தயாரிப்புகள், சேவைகள் அல்லது மென்பொருளை நீங்கள் பயன்படுத்துவதிலிருந்து தடுக்கப்பட்டிருந்தால் Facebook ஐ நீங்கள் பயன்படுத்தக்கூடாது.
    3. ஜெர்மன் பயனர்களுக்கு மட்டும் பொருந்தும் சில குறிப்பட்ட விதிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
  17. வரையறைகள்

    1. "Facebook" அல்லது ”Facebook சேவைகள்” என்பதாக இவற்றின் வழியே நாங்கள் வழங்கும் அம்சங்கள் மற்றும் சேவைகளைக் குறிக்கின்றோம் (a) www.facebook.com இல் உள்ள எங்கள் இணையதளம் மற்றும் Facebook பிராண்ட் அல்லது இணை பிராண்டு கொண்ட பிற இணையதளங்கள் (துணை டொமைன்கள், சர்வதேசப் பதிப்புகள், விட்ஜெட்கள் மற்றும் மொபைல் பதிப்புகள் உட்பட); (b) எங்கள் பிளாட்பார்ம்; (c) விரும்பும் பொத்தான், பகிர்தல் பொத்தான் மற்றும் அதே போன்றவற்றை வழங்கும் சோஷியல் பிளக்இன்கள்; மற்றும் (d) பிற மீடியா, பிராண்டுகள், தயாரிப்புகள், சேவைகள், மென்பொருள் (டூல்பார் போன்றவை), சாதனங்கள் அல்லது இப்போது இருக்கும் அல்லது பின்னர் உருவாக்கப்படும் நெட்வொர்க்குகள். Facebook தனது சொந்த விருப்பத்தின் பேரில் அதன் பிராண்ட்கள், தயாரிப்புகள் அல்லது சேவைகள் இந்த SRR ஆல் இல்லாமல் வேறொரு புதிய விதிமுறைகளை உருவாக்கி நிர்வகிக்கலாம்.
    2. "பிளாட்பார்ம்" என்பது Facebook இலிருந்து தரவைப் பெறவும் அல்லது எங்களுக்குத் தரவை அனுப்பவும் பயன்பாட்டு டெவலப்பர்கள் மற்றும் இணையதள ஆபரேட்டர்கள் உட்பட மற்றவர்கள் பயன்படுத்தும் APIகள் மற்றும் சேவைகளின் (உள்ளடக்கம் போன்றவை) தொகுப்பு ஆகும்.
    3. "தகவல்கள்" என்பது Facebook இல் ஊடாடும் பயனர்கள் அல்லது பயனர் அல்லாதவர்கள் எடுக்கும் செயல்பாடுகள் உட்பட உங்களைப் பற்றிய உண்மைகளும் பிற தகவல்களும் ஆகும்.
    4. "உள்ளடக்கம்" என்பது Facebook சேவைகளைப் பயன்படுத்தி நீங்கள் அல்லது மற்றவர்கள் இடுகையிடும், வழங்கும் அல்லது பகிரும் தகவல்கள்.
    5. "தரவு" அல்லது "பயனர் தரவு" அல்லது "பயனரின் தரவு" என்பது நீங்கள் அல்லது மூன்றாம் தரப்பினர், பிளாட்பார்ம் வழியாக Facebook இலிருந்து பெறும் அல்லது Facebook க்கு அளிக்கும் பயனரின் உள்ளடக்கம் அல்லது தகவல் உட்பட எல்லாத் தரவும் அடங்கும்.
    6. "இடுகை" என்பது Facebook இல் இடுகையிடும் அல்லது Facebook ஐப் பயன்படுத்திக் கிடைக்குமாறு செய்யும் விஷயங்கள்.
    7. "உபயோகம்" என்பது பயன்படுத்துதல், இயக்குதல், நகலெடுத்தல், பொதுவில் செய்து காட்டுதல் அல்லது காட்சிப்படுத்தல், வழங்குதல், மாற்றுதல், மொழிபெயர்த்தல் மற்றும் அதன் வழித் தோன்றல்களை உருவாக்குதல்.
    8. "பயன்பாடு என்பது" பிளாட்பார்மைப் பயன்படுத்தும் அல்லது அணுகும் பயன்பாடு அல்லது இணையதளம், அத்துடன் எங்களிடமிருந்து தரவைப் பெறுபவை அல்லது தரவைப் பெற்றவை.  எங்களிடம் உள்ள எல்லா தரவையும் நீங்கள் நீக்காமல் இருந்து பிளாட்பார்மை இனி அணுகவில்லை என்றாலும், நீங்கள் தரவை நீக்கும் வரை பயன்பாடு என்ற செயலில் இருக்கும்.
    9. “டிரேடுமார்க்குகள்” என்பது இங்கு பட்டியலிடப்பட்டுள்ள டிரேடுமார்க்குகளைக் குறிக்கிறது.
       
  18. மற்றவை

    1. அமெரிக்கா அல்லது கனடாவில் நீங்கள் வசித்தால் அல்லது வணிகத்திற்கான தலைமை இடத்தைக் கொண்டிருந்தால், இந்த அறிக்கையானது உங்களுக்கும் Facebook, Inc.க்கும் இடையிலான ஒப்பந்தமாகும்.  இல்லை எனில், இந்த அறிக்கையானது உங்களுக்கும் Facebook Ireland Limitedக்கும் இடையிலான ஒப்பந்தமாகும்.  “நாம்,” “நாங்கள்” மற்றும் “எங்கள்” ஆகியவை Facebook, Inc. அல்லது Facebook Ireland Limited ஐ பொருத்தமான இடத்தில் குறிக்கிறது.
    2. இந்த அறிக்கை, Facebook மற்றும் தொடர்புடைய தரப்புகளுக்கு இடையேயான முழு ஒப்பந்தம் ஆகும், மேலும் ஏதாவது முந்தைய ஒப்பந்தங்கள் இருப்பின் அவற்றை காலாவதியாக்கும்.
    3. இந்த அறிக்கையின் ஏதாவது பகுதியை நடைமுறைப்படுத்த முடியாதது எனில், மீதமுள்ள பகுதி முழுமையாக நடைமுறையில் இருக்கும்.
    4. நாங்கள் இந்த அறிக்கையின் ஏதாவது பகுதியைச் செயல்படுத்தத் தவறினால், அது ஒரு தள்ளுபடியாகக் கருதப்பட மாட்டாது.
    5. இந்த அறிக்கையின் திருத்தங்களும் தள்ளுபடிகளும் எங்கள் எழுத்துப்பூர்வமாக கையொப்பமிட்டு வழங்கப்படும்.
    6. நீங்கள் எங்கள் அனுமதியின்றி வேறு யாருக்கும் இந்த அறிக்கை கீழ் உங்கள் உரிமைகள் அல்லது கடமைகளை மாற்றக்கூடாது.
    7. இந்த அறிக்கையின் கீழ் உள்ள எங்கள் உரிமைகள் மற்றும் கடமைகள் அனைத்தும், சட்டப்படியாக அல்லது பிற முறைகளில் இணைத்தல், கையகப்படுத்தல் அல்லது சொத்துகளை விற்கும் போது எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் மாற்றப்படும்.
    8. இந்த அறிக்கையில் எதுவும் சட்டத்திற்கு இணங்கி நடப்பதில் இருந்து எங்களைத் தடுக்காது.
    9. இந்த அறிக்கை ஆனது எந்த மூன்றாம் தரப்பினருக்கும் பயன்பெறும் உரிமைகளை வழங்கவில்லை.
    10. வெளிப்படையாக உங்களுக்கு வழங்கப்படாத எல்லா உரிமையும் எங்களுக்கு உரியதாகும்.
    11. Facebook ஐப் பயன்படுத்தும் அல்லது அணுகும் போது பொருந்தும் அனைத்து சட்டங்களுக்கும் நீங்கள் இணங்க வேண்டும்.

Facebook சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதன் அல்லது அணுகுவதன் மூலம், அவ்வப்போது மாற்றப்படும் தரவுக் கொள்கைக்கு இணங்க, உள்ளடக்கம் மற்றும் தகவல்களை நாங்கள் சேகரித்துப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் Facebook பயன்படுத்துவதைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கும் பின்வரும் ஆவணங்களையும் படித்துப் பார்க்கலாம்:
  • கட்டண விதிமுறைகள்: பிற விதிமுறைகள் கூறப்பட்டிருந்தால் தவிர இந்தக் கூடுதல் விதிமுறைகள் Facebook இல் மற்றும் அதன் வழியாக மேற்கொள்ளும் எல்லாப் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.
  • பிளாட்பார்ம் பக்கம்: மூன்றாம் தரப்புப் பயன்பாட்டைச் சேர்க்கும் போது அல்லது Facebook Connect ஐப் பயன்படுத்தும் போது என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் பக்கம் உதவும், இதில் உங்கள் தரவை எவ்வாறு அணுகலாம் மற்றும் பயன்படுத்தலாம் என்பதும் உதவும்.
  • Facebook பிளாட்பார்ம் கொள்கைகள்: Connect தளங்களில் உள்ளிட்ட பயன்பாடுகளுக்குப் பொருந்தும் கொள்கைகளை இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன.
  • விளம்பரப்படுத்தல் கொள்கைகள்: Facebook இல் செய்யப்படும் விளம்பரங்களுக்குப் பொருந்தும் கொள்கைகளை இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன.
  • சுய சேவை விளம்பர விதிமுறைகள்: நீங்கள் விளம்பரங்கள் அல்லது பிற வர்த்தகச் செய்திகள் அல்லது ஸ்பான்சர் செயல்பாடு அல்லது உள்ளடக்கம் ஆகியவற்றை உருவாக்க, சமர்ப்பிக்க அல்லது டெலிவர் செய்ய சுய சேவை விளம்பர இடைமுகங்களைப் பயன்படுத்தினால் இந்த விதிமுறைகள் பொருந்தும்.
  • விளம்பரப்படுத்தல் வழிகாட்டுதல்கள்: Facebook இல் செய்யப்படும் போட்டிகள், அதிர்ஷ்ட குலுக்கல் மற்றும் விளம்பரங்களுக்குப் பொருந்தும் கொள்கைகளை இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன.
  • Facebook பிராண்டு வளங்கள்: Facebook டிரேடுமார்க்குகள், லோகோக்கள் மற்றும் ஸ்க்ரீன்ஷாட்க்ளைப் பயன்படுத்துவதற்குப் பொருந்தும் கொள்கைகளை இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன.
  • பக்கங்களின் விதிமுறைகள்: Facebook பக்கங்களைப் பயன்படுத்துவதற்கான கொள்கைகளை இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன.
  • சமூகத் தரநிலைகள்: Facebook இல் நீங்கள் இடுகையிடும் உள்ளடக்கம் மற்றும் Facebook இல் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்குப் பொருந்தும் கொள்கைகளை இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன.

உரிமைகள் மற்றும் பொறுப்புகளின் அறிக்கையை வெவ்வேறு மொழிகளில் அணுக, பெரும்பாலான பக்கங்களின் இடது மூலையில் இருக்கும் மொழி இணைப்பைக் கிளிக் செய்து, உங்கள் Facebook அமர்வின் மொழியை மாற்றவும்.  நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியில் அறிக்கை கிடைக்கவில்லை என்றால், ஆங்கிலப் பதிப்பை இயல்புநிலை ஆக்குவோம்.